×

பெரியகுளத்தில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பெரியகுளம், அக். 8: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கொடைக்கானல் வன கோட்ட வன உயிரின சரணாலயத்தின் எல்கைக்கு உட்பட்ட தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையின் சார்பாக, வனம் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து வன உயிரின பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி நேற்று முன் தினம் நடைபெற்றது. இப்பேரணியை கொடைக்கானல் வன கோட்ட உதவி வன பாதுகாவலர் சக்திவேல், பெரியகுளம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த பேரணியானது பெரியகுளம் தென்கரை நகராட்சி அலுவலகம் முன்பாக துவங்கி நகரின் முக்கிய வீதியான திருவள்ளுவர் சிலை, கச்சேரி ரோடு, ஆடு பாலம் வழியாக, சென்று பெரியகுளம் வடகரை பழைய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது. விழிப்புணர்வு பேரணியில் வனங்களை காப்போம், மழை வளம் பெறுவோம், வனங்களில் வன விலங்குகள் வாழவில்லை என்றால் பூமி அழிந்து விடும், வனங்களை காப்பதின் அவசியம் குறித்து விளக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு 200க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர். இதில், தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அதிகாரி டேவிட் ராஜ் மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.

The post பெரியகுளத்தில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Devadanapatti ,Kodaikanal ,Forest ,Division Wildlife Sanctuary ,Periyakulam, Theni District ,Wildlife Conservation Awareness Rally in ,Dinakaran ,
× RELATED கோயில் செயல் அலுவலரை தாக்கியவர் மீது வழக்கு